Nalliravil Vanthuthitha Vinnin Jothiyae | நள்ளிரவில் வந்துதித்த விண்ணின் ஜோதியே

1 minuteread

Nalliravil Vanthuthitha Vinnin Jothiyae – Tamil Christmas Songs and Lyrics

நள்ளிரவில் வந்துதித்த விண்ணின் ஜோதியே
புல்லணையில் மலர்ந்திட்ட தேவ மைந்தனே
விண்ணவரும் மன்னவரும் மகிழ்ந்தனரே
என்னை மீட்க பிறந்த வாச மலரே

  1. மாந்தர் பாவங்களை சுமந்து தீர்க்க வந்த
    நல்ல மீட்பர் இவரே
    இருளை நீக்க வந்த தேவமைந்தன் இவர்
    விண்ணின் ஜீவ ஒளியே
    ஆலோசனை கர்த்தர் அவர் நாமமே
    என்னை காக்கும் வல்லமையின் தேவனே
    அன்பு மலரே என் வாச மலரே
    அன்னை மடியில் தேவ பாலனே — நள்ளிரவில்
  2. தியாக உள்ளம் கொண்ட அன்பின் தேவ மகன்
    தன்னை ஈன்ற சுதனே
    உலகில் அமைதி தந்து மனுவில் பிரியம் கொண்ட
    நல்ல மேய்ப்பர் இவரே
    தாழ்மையிலும் பண்புமிகு பாலனே
    மீட்பராக பாரில் வந்த தேவனே
    எந்தன் நேசரே தூயாதி தூயரே
    முன்னணையிலே அன்பு பாலனே — நள்ளிரவில்

Lyrics & Tune: Mr.Ramesh Devaraj | Tamil Christmas Song Lyrics | Nalliravil Vanthuthitha Vinnin Jothiyae | நள்ளிரவில் வந்துதித்த விண்ணின் ஜோதியே | Tamil Christian Songs and Lyrics | Christmas Carol Tamil Songs

0
98
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.