Neerae Vazhi Neerae Sathyam | நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்

1 minuteread

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்

விண்ணிலும் மண்ணிலும்
மெய் நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா

  1. கல்லும் அல்ல மண்ணும் அல்ல
    கல்லால் ஓர் சிற்பமல்ல
    ஜீவனுள்ள தேவன் என்றால்
    நீர் தானைய்யா – 2

ரூபங்கள் உமக்கில்லை
சொருபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே – 2

  1. உண்டானது எல்லாமே உம்மாலே
    உண்டானது உம் நாம மகிமைக்கே
    உண்டாக்கினீர் – 2

படைப்பு தெய்வமல்ல
பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா – 2

  1. எல்லாம் வல்ல தெய்வம் நீரே
    எல்லையில்லாதவரே
    உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே – 2

வானம் உம் சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி – 2

Aayathamaa Vol-2 | Ravi Bharath | Neerae Vazhi Neerae Sathyam Lyrics In Tamil

0
87
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.