Bethalayil Piranthavarai Immanuvelarai – New Tamil Christmas Songs 2024
பெத்தலையில் பிறந்தவரை இம்மானுவேலரை
ஆடி பாடி போற்றிடுவோமே
உலகத்தை மீட்க வந்த இரட்சகராம் இயேசுவை
கரம் தட்டி துதித்திடுவோமே (2)
அவர் ரட்சகர் மீட்க வந்தவர்
இம்மானுவேலரும் அவரே (2) – பெத்லையில் பிறந்தவரை
1. சாஸ்திரிகள் மூவராய் பெத்லேகம் சென்றனர்
பாதை காட்டும் விண்மீனின் வழியிலே சென்றனர் (2)
தொழுவத்திலே படுத்திருந்த பாலகனை கண்டனர் (2)
காணிக்கைகள் செலுத்தி பாதம் வணங்கி சென்றனர் (2) – அவர் – பெத்தலையல்
2. உலகில் உள்ள இருளைப் போக்க வெளிச்சமாக வந்தவர்
நம் பாவத்தையும் சாபத்தையும் அகற்றி போட வந்தவர் (2)
பாரினில் மனிதனாக மரியின் மடியில் பிறந்தவர் (2)
உள்ளத்திலே பிறக்க நாமும் இடம் கொடுப்போமா (2) –அவர் – பெத்தலகேம்
3. தொழுவத்திலே ஏழ்மையின் கோலமாக பிறந்தவர்
மேன்மையை வெறுத்து தினம் தாழ்மையை தரித்தவர்-2
ராஜாதி ராஜாவாக உலகை ஆள வந்தவர்–2
மேசியாவாம் மீட்பர் இயேசு பிறந்திருக்கிறார்.– 2-நமக்கு அவர்
பெத்தலைமயில் பிறந்தவரை இம்மானுவேலரை ஆடி பாடி போற்றிடுவோமே
இரட்சகராம் இயேசுவை கரம்
Lyrics & Tune : Bro Manohar | Music: Emmanuel Rajan | New Tamil Christmas Songs 2024 | Bethalayil Piranthavarai | பெத்தலையில் பிறந்தவரை | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Carol Songs