Dhavidhin Maindhan Thamaaga – New Tamil Christmas Songs
வானம் விட்டு இரங்கினாரே
இரங்கினாரே ஒரு மனிதராகவே
தேவ திட்டம் நிறைவேற்றினாரே
நிறைவேற்றினாரே மனிதராகவே
தாவீதின் மைந்தன் தாமாக வந்து தாட்பரிகின்றாரே
புன்னகை பூத்த புண்ணியர் இன்று பூத்திருக்கிறாரே – 2
பிறந்தாரே பரன் ஜெனித்தாரே
சுதன் உதித்தாரே நம்மை காத்திடவே – 2
1. இருளின் நாட்கள் முடிந்திடவே வெளிச்சம் தோன்றியதே
அருளின் நாட்கள் வந்திடவே அன்பர் பிறந்தாரே – 2
பாவபாரம் போக்கிடவே
பாலகன் பிறந்தாரே
உலகின் சாபம் முறிந்திடவே
மேய்ப்பராய் மலர்ந்தாரே – 2 – பிறந்தாரே
2. மனதின் ஆழம் தெரிந்தவரே மீட்பராய் பிறந்தாரே
உறவின் ஆழம் புரிந்தவரே தம்மையே ஈந்தாரே – 2
தூய வாழ்வை அளித்திடவே தூயவர் பிறந்தாரே
மாய வாழ்க்கை நீக்கிடவே மகிமையாய் வந்தாரே – 2
தாவீதின் மைந்தன் தாமாக வந்து தாட்பரிகின்றரே
புன்னகை பூத்த புண்ணியர் இன்று பூத்திருக்கிறாரே – 2
Lyrics: Naveen, Kingsley, Samson | Tune: Wilson Brito & Vinnyallegro | Music: Vinny Allegro | New Tamil Christmas Songs | Dhavidhin Maindhan Thamaaga | தாவீதின் மைந்தன் தாமாக | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Carol Songs