Vazhthukkal Naam Kooruvom Lyrics in Tamil – New Tamil Christmas Songs – Lyrics: Mr. Nellai Selvin
வாழ்த்துக்கள் நாம் கூறுவோம்
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நாம் கூறுவோம் – 2
இது தானே சந்தோச நாள்
இயேசு பிறந்த கிறிஸ்மஸ் நாள் – 2
நமக்காக பிறந்தாரே இதை நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம் – 2
1. தூதர் கூட்டம் கானம் பாட
மேக கூட்டம் சாரல் தூவ
தென்றல் வந்து மெல்ல வீசி
தேனிசை கீதம் பாட
விண்ணவர் மண் மீதிலே பிறந்தார்
கன்னி மரி மடி மீதிலே – 2
நமக்காக பிறந்தாரே இதை நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம் – 2 -வாழ்த்துக்கள்
2. பாவம் எல்லாம் இனி இல்லை
பாரில் எங்கும் சந்தோசம்
சாபம் இனி இல்லை இல்லை
வாழ்வெல்லாம் ஆனந்தம்
பாவத்தின் இருள் நீக்கிட பிறந்தார்
பாவிகளை இரட்சித்திடவே – 2
நமக்காக பிறந்தாரே இதை நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம் – 2 – வாழ்த்துக்கள்
Lyrics: Mr. Nellai Selvin | Tamil Christmas Song Lyrics | Vazhthukkal Naam Kooruvom | வாழ்த்துக்கள் நாம் கூறுவோம் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | New Tamil Christmas Songs