Yesu Vanthar Ulagathai Meetka – New Tamil Christmas Songs
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
ஏழை மனுகுலமாய் உலகத்தில் பிறந்தார்
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
அவர் பிறக்க வானம் தொனிக்க
பூமி ஆனந்தமானதே
அவர் மரிக்க உயிர்த்தெழும்ப
பரலோகம் திறந்ததே
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
1. சாஸ்திரிகள் மூவர் வந்து
பணிந்து கொண்டனரே
மேய்ப்பர்கள் நடுவில் நற்செய்தி தோன்றியதே – 2
மாட்டு தொழுவத்தில்
ராஜா பிறந்தரே
இருண்ட பூமியில் வெளிச்சம் உதித்ததே – அவர் பிறக்க – இயேசு வந்தார் உலகத்தை மீட்க
2. அழகில் சிறந்தவர்
சௌந்தரியமானவர்
பரிசுத்த ஆவியானால் ஜெனிப்பிக்கப்பட்டவர்– 2
இம்மானுவேல் என்ற
பெயரும் கொண்டவர்
எந்தக் காலத்திலும்
நம்மோடு இருப்பவர் – அவர் பிறக்க – இயேசு வந்தார் உலகத்தை மீட்க
3. தாழ்மையின் ரூபமாக ராஜா பிறந்தரே
நம்மையும் தாழ்மையாக
வாழ சொன்னாரே -2
இயேசுவின் பிறப்பில் ஒரு
விடுதலையுண்டே
அதை நாம் நாடினால்
நமக்குள் பிறப்பாரே – அவர் பிறக்க – இயேசு வந்தார் உலகத்தை மீட்க
Lyrics: Shadrach Masilan, Calvin | Tune: Kingsly | Music: Vinny Allegro | New Tamil Christmas Songs 2024 | Yesu Vanthar Ulagathai Meetka | இயேசு வந்தார் உலகத்தை மீட்க | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Carol Songs