Devan Thamadhu Kumaranai | தேவன் தமது குமாரனை

1 minuteread

Devan Thamadhu Kumaranai – New Tamil Christmas Songs

தேவன் தமது குமாரனை
எனக்காய் அனுப்பினார்
இயேசுவும் என்னை நினைத்ததால்
பூமியில் வந்துதித்தார்.

பல்லவி
நான் கெட்டுப் போகாமல் அழிந்தும் போகாமல்
மீட்டிட இயேசு வந்தார்
என்னை தள்ளிவிடாமல் தண்டித்திடாமல்
என்னிலும் அன்பு கூர்ந்தார்.

1. தேவகுமாரன் இவர்
மனுஷகுமாரனானார்
பரிசுத்தரான இவர்
பாவத்தின் சாயலானார்.

2. தேவனின் ரூபம் இவர்
அடிமையின் ரூபமானார்
எல்லா நாமத்திலும் உயர்ந்தவர்
மரணம் வரை தாழ்த்தினார்.

Lyrics & Tune : Pr. M.Sam Alister | Music : John Rohith | New Tamil Christmas Songs | Devan Thamadhu Kumaranai | தேவன் தமது குமாரனை | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Carol Songs

    0
    42
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.