Manathi Mannan Varareetho Pon Meni Vananan Lyrics in Tamil – Old Tamil Christmas Songs
மன்னாதி மன்னன் வாராரிதோ
பொன் மேனி வண்ணன் பிறந்தாரிதோ
விண்மின்களே விரைந்தோடுங்கள்
பொன்மாலைகள் போய் சூடுங்கள்
1. வான் கூட்டமே வந்து ஊர் கூட்டுங்கள்
மான் கூட்டமே வந்து தேரோட்டூங்கள்
வானங்களே நின்று வழிகாட்டூங்கள்
கானங்களே நல்ல கவி பாடுங்கள் – மன்னாதி
2. வெள்ளி நிலா ஓடி வழிகாட்டிடு
புள்ளினமே பாடி களிப்பூட்டிடு
தண்ணீரே பனியே தளிர் தென்றலே
பன்னீர் தெளித்திங்கு பனி செய்திடு – மன்னாதி
3. சோலைகளே நல்ல மலர் தூவுங்கள்
சேனைகளே மெல்ல நடைபோடுங்கள்
தென்றல்களே வந்து சாய்ந்தாடுங்கள்
இன்றெங்கள் மகாராஜன் பிறந்தாரென்று – மன்னாதி
Tamil Christmas Song Lyrics | Manathi Mannan Varareetho | மன்னாதி மன்னன் வாராரிதோ | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs