Pareer Gethsamanae Poongavil பாரீர் கெத்சமனே பூங்காவில்

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Pareer Gethsamanae Poongavil பாரீர் கெத்சமனே பூங்காவில்
  1. பாரீர் கெத்சமனே
    பூங்காவில் என் நேசரையே
    பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
    சத்தம் தொனித்திடுதே
  2. தேகமெல்லாம் வருத்தி
    சோக மடைந்தவராய்
    தேவாதி தேவன் இயேசு நாதன்
    படும் பாடுகள் எனக்காக
  3. அப்பா இப்பாத்திரமே
    நீக்கும் நின் சித்தமானால்
    எப்படியும் உம் சித்தம் செய்ய என்னை
    தத்தம் செய்தேன் என்றாரே
  4. இரத்தத்தின் வேர்வையாலே
    மெத்தலும் நனைத்தே
    இம்மானுவேலன் உள்ளமுருகியே
    வேண்டுதல் செய்தனரே
  5. மும்முறை தரைமீதே
    தாங் கொணா வேதனையாய்
    முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
    பாதகர் மீ;ட்டிடவே
  6. என்னையும் தம்மைப் போல
    மாற்றும் இம்மாநேசத்தை
    எண்ணி எண்ணியே உள்ளம் கனிந்து நான்
    என்றும் புகழ்ந்திடுவேன்
0
5
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.