பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே
- தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் - பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் – தினம் - அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே – எங்கள் - விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் – தினம் - அயல் மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம் - சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 8 | Parisutha Aaviye Bakthargal | பரிசுத்த ஆவியே பக்தர்கள் | Tamil Christian Song Lyrics