Puthu Varudamathil Puthu Kirubaieethae | புது வருடமதில்‌ புது கிருபையிதே

1 minuteread

Puthu Varudamathil Puthu Kirubaieethae Lyrics in Tamil – New Year Christian Tamil Songs

புது வருடமதில்‌ புது கிருபையிதே
புதிய பாதையிலே
புது கவி பாடி கர்த்தரில் நாம்‌
புதிய பெலனடைவோம்‌

1. வருடம்‌ வளர்ந்திட நன்மை பெருக
இருதயம்‌ நிரம்ப – தேவன்பால்‌
அனலாய்த்‌ தணலாய்‌ ஆவியில்‌ நிறைந்தே
அவர்‌ துதி செலுத்திடுவோம்‌ நாமே – புது

2. ஆயுள்‌ பரியந்தம்‌ ஆண்டு நடத்தும்‌
ஆதி அந்தமிவர்‌ – எம்‌ இயேசு
மரித்தே எமக்காய்‌ உயிருடன்‌ எழுந்த
மனுவேல்‌ எம்மோடிருப்பார்‌ என்றும்‌ – புது

3. கர்த்தர்‌ உரைத்திடும்‌ வாக்கு அனைத்தும்‌
கைக்கொண்டால்‌ பிழைப்போம்‌ – அனுதினம்‌
கிருபாசனத்தில்‌ திருமொழி தொனிக்கும்‌
கருத்துடன்‌ செவி கொடுப்போம்‌ இன்றே – புது

4. ஆண்டு முழுவதும்‌ கர்த்தர்‌ கரத்தில்‌
ஆர்பணித்திடுவோம்‌ எம்‌ வாழ்வை
சுகமாய்‌ ஜெயமாய்‌ காத்திடும் மகிபன்‌
இகபர நலனருள்வார்‌ ஸ்தோத்திரம்‌ – புது

5. வானந்திறந்தவர்‌ வாக்குத்தத்தமே
வல்ல அருள்‌ வரமே – பொழியுதே
சபையாம்‌ சரீரம்‌ கிறிஸ்துவே தலைவர
ஜெயம்‌ கொண்டு மகிழ்ந்திடுவோம்‌ சீயோனில்‌ – புது

6. தேவ மகிமையே தங்கும்‌ ஸ்தலமே
தூய சீயோனிதே எம்‌ வாஞ்சை
விரும்பி அழைக்க ஆண்டவர்‌ வருவார்‌
விரைந்து பறந்து சந்திப்போம்‌ வானில்‌ – புது

New Year Christian Tamil Songs | Tamil Christian Birthday Songs | Puthu Varudamathil Puthu Kirubaieethae | புது வருடமதில்‌ புது கிருபையிதே‌ | Tamil Christian Songs and Lyrics

0
38
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.