ரகசியமாய் ஒரு வருகை
அனைவரும் காணும் ஒரு வருகை
இரண்டுக்கும் நடுவே உபத்திரவம்
அதன் நடுவில் மகா உபத்திரவம்
சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே
வருகிறார் இரகசியமாய்
- சபையை தம்மோடு அழைத்து வருகிறார்
வெளியரங்கமாய்
நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே
அதில் மிகுதியாய் பாடுகள் புவியில் தோன்றுதே - நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய்
மாறிடுவோம் இரகசியமாய்
ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம் வெளியரங்கமாய்
கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு
சாதனைதான் இந்த இரட்சிப்பை
நீ அசட்டைசெய்தால் நரக வேதனைதான் - ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும்
எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்
யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும்
காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார்
இது ரகசிய வருகை ஒரு அதிசய வருகை
Aayathamaa Vol-4 | Ravi Bharath | Ragasiyamaai Oru Varugai Lyrics In Tamil