Ratham Yesu Ratham Ella Paava – Tamil Christian Song Lyrics – Tamil Communion Songs and Lyrics
இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா பாவ அழுக்கையும் கழுவுமே
இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா அவயவம் யாவையும் சுத்தம் செய்யும் – 2
1. ஆதி காலத்தில் வியாதி யாவும்
அற்புதமாய் சொஸ்தப்படுத்தியவர் – 2
ஆத்துமா எல்லாம் இரட்சியும் ஐயா
ஆத்ம நாயகா இயேசையா – 2 – இரத்தம்
2. வியாதி நேரத்தில் பரிகாரி நீரே
பரம ஔஷதம் நீர்தானய்யா – 2
பிசாசின் பிடியில் விடுதலை உண்டு
மாறாத உம் இரத்தம் வல்லமையால் – 2 -இரத்தம்
3. ஐந்து காயங்கள் ஆறாக ஓட
இரத்தம் வெள்ளம் சொரிந்தீரையா -2
பாவியாம் என்னை மன்னியும் என்று
கெஞ்சும் இந்த வேளையிலே – 2 -இரத்தம்
4. வெள்ளி அல்ல பொன்னும் அல்ல
விலையாக சிலுவையில் நீர் கொடுத்தீர் – 2
விலையேறிய இரத்தம் எனக்காய் ஈந்து
சொந்தமாக என்னை கொண்டீர் – 2 -இரத்தம்