சாலேமின் ராஜா சங்கையின் ராஜா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ராஜியம்
செய்திட சடுதி வாருமேன்
- சீக்கிரம் வருவேனென்றுரைத்துப் போன
செல்வக்குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித்திரிகின்ற செய்தி கேளீரோ - எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே
நீர் சுட்டிக் காட்டி போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே - நங்கை எருசலேம் பட்டினம்
உம்மை நாடித் தேடுதே –
இந்த நானிலத்திலுள்ள யூதச் சாதியும்மை தேடிவாடுதே