சேனைகளின் தேவனாகிய கர்த்தரின்
நாமத்தில் நான் வருகிறேன்
சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின்
நாமத்தில் யுத்தம் புரிகிறேன்
வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்
- பட்டயத்தை நம்பவில்லையே
என் வில்லையும் நான் நம்பவில்லையே
உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்
வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன்
வெட்கப்பட்டுப் போவதில்லையே - மாம்சத்தோடும் சண்டையில்லையே
இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே
இந்த பூலோகத்தின் அதிபதியோடும்
பொல்லாத ஆவிகளோடும்
அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன் - என்னை கீழே தள்ளிவிட்டானே
சத்ரு ஊர் முழுதும் தூற்றிவிட்டானே
என் தேவன் என்னை தூக்கிவிட்டார்
நிந்தைதனை மாற்றிவிட்டார்
சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே
Aayathamaa Vol-5 | Ravi Bharath | Senaigalin Dhevanagiya Kartharin Lyrics In Tamil