Thevathi Devan En Sonthamanavar – Tamil Christmas Songs – Pastor.Reegan Gomez
1. தேவாதி தேவன் என் சொந்தமானார்
என்ன ஆனந்தமே
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
என்ன பேரின்பமே (2)
சந்தோஷமே என் உள்ளத்தில்
நதியாய் பாயுதே
சர்வ வல்லவர் இயேசுவே
என் வாழ்வின் சொந்தமே (2)
2. ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
என் இயேசு நல்லவரே
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
என் மீட்பரைப் போற்றுவேன் (2) –
சந்தோஷமே
3. கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டாரே
களிகூர்ந்து பாடிடுவேன்
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
எந்நாளும் நன்றி சொல்வேன் (2)- சந்தோஷமே
4. என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
என்றென்றும் என் சொந்தமே
எல்லையில்லாத தம் அன்பினாலே
என்னையும் நேசித்தாரே (2) -சந்தோஷமே
Thevathi Thevan En Sonthamanavar Lyrics in English
1. Thevaathi Thevan En Sontha-maanaar
Enna Aananthamae
Mannaathi Mannan Ennaith-thedi Vanthaar
Enna Perinbamae
Santhoshamae En Ullaththil
Nathiyaai Paayuthae
Sarva Vallavar Yesuvae
En Vaalvin Sonthamae
2. Aanantha Geetham En Naavil Thanthaar
En Yesu Nallavarae
Ratchannya Geetham Ennaalum Paadi
En Meetparaip Pottuvaen
3. kattukalai-yellaam Udaiththu Vittar
kalikoornthu Paadiduvaen
kirupaikal thanthaar vallamai thanthaar
En-naalum Nandri Solvaen
4. En Aathma Nesar En Yesu Raajaa
Endentum en sonthamae
Ellaiy-illaatha Tham Anbinaalae
Ennaiyum Nesiththaarae