Krusin Mel Krusin Mel Lyrics in Tamil – Tamil Good Friday Songs
1. குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?
பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்!
2. பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!
தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்!
3. இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!
இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்!
4. பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ!
5. கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்
6. சத்ருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால்,
நித்தமும் சிலுவையின் நேசத்தை சிந்திப்பேன்
7. பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில்
ஆவலாய் சிலுவையின் காட்சியை சிந்திப்பேன்
8. சூறா வளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்,
சிலுவையின் சிநேகத்தைச் சாது நான் நோக்குவேன்
9. சத்துரு சேனைகள் சூழ்ந்திடும் வேளையில்
சிலுவையில் காண்கின்ற சிநேகத்தை சிந்திப்பேன்
10. இம்மகா சிநேகத்தை ஆத்மமே சிந்திப்பாய்!
இம்மானுவேலே! நீர் ஏழையை சிநேகித்தார்
Tamil Holy Communion Songs | Krusin Mel Krusin Mel | குருசின் மேல் குருசின் மேல் | Tamil Christian Songs and Lyrics | Thiruvirundhu Padalgal | Tamil Lent Songs | Tamil Good Friday Songs