Thanthaen Ennai Yesuvae | தந்தேன் என்னை இயேசுவே

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Thanthaen Ennai Yesuvae | தந்தேன் என்னை இயேசுவே
  1. தந்தேன் என்னை இயேசுவே
    இந்த நேரமே உமக்கே
    உந்தனுக்கே ஊழியம் செய்ய
    தந்தேன் என்னைத் தாங்கியருளும்
  2. ஜீவ கால முழுவதும்
    தேவப்பணி செய்திடுவேன்
    பூவில் கடும் போர் புரிகையில்
    காவும் உந்தன் கரத்தில் வைத்து
  3. உலகோர் என்னை நெருக்கி
    பலமாய் யுத்தம் செய்திடினும்
    நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
    நானிலத்தினில் நாதா வெல்லுவேன்
  4. உந்தன் சித்தமே செய்வேன்
    எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
    எந்த இடம் எனக்கு காட்டினும்
    இயேசுவே அங்கே இதோ போகிறேன்
0
8
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.