தூய்மையே வலிமை கேளீர்!
வாய்மையே உயர்வு காணீர்!
இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2) தூய்மையே
1.சந்திரன் பாதையைக் கண்டாய்
சமுத்திர ஆழத்தை வென்றாய் – (2)
தூய்மையின் பாதைதான் எங்கே?
எனப் பதில் ஏதும் உலகினில் இல்லை! – (2) – தூய்மையே
2.தத்துவம் பேசுவார் உண்டு
தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு – (2)
கல்வி கொடுப்பது அறிவு
ஆனால் தேவன் அருளுவது ஞானம்! – (2) – தூய்மையே
3.அழிக்கவும் ஆக்கவும் அணுதான்
பலபல புதுமைகள் நலம்தான் – (2)
யாவையும் கண்ட மனிதா
மன தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு! – (2) – தூய்மையே
4.பரிசுத்த ஆவியின் நிறைவு
பரிசுத்தமானதோர் வாழ்வு – (2)
வெற்றியின் ஜீவியம் கொள்ள
இயேசு அழைக்கிறார், இணங்கி நீ செல்ல! – (2) – தூய்மையே
Dr.N. Emil Jebasingh | Thuuymaiyae Valimai Kaeleer Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics