Aasaiyaai Kooduvom Anbudan Paaduvom Lyrics in Tamil – Traditional Tamil Christmas Songs
1. ஆசையாய்க் கூடுவோம்
அன்புடன் பாடுவோம்
ஈசனார் தம் நேசமாக
வந்ததைக் கொண்டாடுவோம்
மாசந்தோஷம் மாகெம்பீரம்
மாந்தர் நாமெல்லாருக்கும்
மாட்சியுறும் காட்சி காண
வாரும் பெத்லகேமுக்கு
2. முன்னணை மீதினில்
சின்னவோர் பாலனாய்
உன்னதனொரே குமாரன்
ஒய்யாரமாய்த் தோன்றினார் – மா
3. ரூபமில்லாதவர்
சோபித பூரணர்
சாபம் நிறை பாவ மாம்ச
ரூபெடுத்து வந்தனர் – மா
4. தேசுறை பாலகர்
ஜெசென்னும் பேரினர்
மாசு திகில் நீக்கி நம்மை
மீட்க மனுவாயினர் – மா
Tamil Christmas Song Lyrics | Aasaiyaai Kooduvom Anbudan Paaduvom | ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs