Udhithare Nalla Meipar Pullanai | உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை

1 minuteread

Udhithare Nalla Meipar Pullanai – Tamil Christmas Songs and Lyrics

உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே
விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த
இம்மானுவேலன் இவர் தானே
விண்ணிலே தேவனுக்கே மகிமை
பூமியிலே நல் சமாதானம்
மானிடர் மேல் பிரியமும்
இன்றும் என்றும் உண்டாவதாக

  1. மந்தையை காத்த மேய்ப்பர்களும்
    சிந்தையில் சிறந்த ஞானியரும்
    பாலனை சென்று பணிந்தனரே
    நல் காணிக்கை அவருக்குப் படைத்தனரே
    உன்னையும் என்னையும் மீட்டிடவே
    பூமியில் வந்த அதிசயமே
    எண்ணில் அடங்கா நன்றியுடன்
    அவரைப் போற்றி துதித்திடுவோம்
  2. அன்பே அவரின் திருமொழியாய்
    பண்பில் சிறந்த போதகராய்
    நம்மை அணைத்துக் காத்திடவே
    ஏழையின் கோலம் எடுத்தாரே
    விண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதே
    எண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதே
    வல்லவர் இயேசு பிறந்த நாளில்
    வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்திடுவோம்

Album:Athisayam Vol – 7 | Tamil Christmas Song Lyrics | Udhithare Nalla Meipar Pullanai | உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை | Tamil Christian Songs and Lyrics | Christmas Tamil Carol Songs

0
48
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.