Ummai Nambi Vanthen | உம்மை நம்பி வந்தேன்

1 minuteread

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல – 2
வெறுங்கையாய் நான் கடந்து வந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் – 2

ஏல் எல்லோக்கே ஏல் எல்லோக்கே
உம்மைத் துதிப்பேன் – 2

  1. காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
    கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் – 2
    உடன்படிக்கை என்னோடு செய்து
    இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் – 2

ஏல் எல்லோக்கே ஏல் எல்லோக்கே
உம்மைத் துதிப்பேன் – 2

  1. வேண்டினோரெல்லாம்
    விடைபெற்ற போதும்
    வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் – 2
    பரதேசியாய் நான் தங்கினதை
    சுதந்திரமாக மாற்றித் தந்தீர் – 2

ஏல் எல்லோக்கே ஏல் எல்லோக்கே
உம்மைத் துதிப்பேன் – 2

Ummai Nambi Vanthen Lyrics In Tamil

0
98
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.