உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா
- உம் அன்பைப் பருகிட ஓடோடி
வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன்
இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா
- தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே - பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும் - மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே
உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே - கொடியாக படரணும் உந்தன் நேசமே
மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான் - ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 12 | Unnatha Thaevanae En Yesu | உன்னத தேவனே என் இயேசு | Tamil Christian Song Lyrics