Vaanilae Magimai Boomiyil Amythi – Tamil Christmas Songs and Lyrics
வானிலே மகிமை பூமியில் அமைதி
மனுஷரில் பிரியம் உண்டாகுமே
- அதிசயமானவர் இவர் ஆலோசனைக் கர்த்தர்
வல்லமை தேவனாம் நித்தியமானவர்
இவரே நம் சமாதானப் பிரபு (2) - தூதர்கள் பாடிடும் தேவனின் மைந்தனாம்
சாஸ்திரிகள் மேய்ப்பர்கள் பணிந்திடும் பாலனாம்
இவரே யூதரின் ராஜாவானவர் - இருளினில் வெளிச்சமாய் இகத்தினில் உதித்தவர்
பாவங்கள் போக்கவே பாரினில் வந்தவர்
இவரே நம்மை மீட்கும் ரட்சகர்