Varuga Varuga Aaveyanavar Engal | வருக வருக ஆவியானவர் எங்கள்

1 minuteread
  1. வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே – (2)
    தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே – இன்றே
    தருக தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே
    புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே – தினமும்
    புதிய புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே
    வீடுதோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே -(2)
    பாத்திரர் தோன்றட்டும்
    அற்புதம் நடக்கட்டும்
    பிசாசுகள் ஓடட்டும்
    கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும்

வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே – (2)

  1. வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே -(2)
    தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே – இன்றே
    தருக தருக தேவதரிசனம் அனைவர் உள்ளத்திலே
    ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே – தினமும்
    ஒருவர் ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே
    புதிய புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே -(2)
    அற்புதம் காணட்டும்
    அதிசயம் தோன்றட்டும்
    இயேசுவே மகிழட்டும்
    அற்புதம் அதிசயம் இயேசுவே

வருக வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே – (2)

  1. வருக வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே -(2)
    தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே – இன்றே
    தருக தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே
    பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே – தினமும்
    பட்டணங்கள் கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே
    இந்தியாவின் ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே -(2)
    அற்புதம் காணட்டும்
    அதிசயம் தோன்றட்டும்
    இயேசுவே மகிழட்டும்
    அற்புதம் அதிசயம் இயேசுவே

ஆமென் ஆமென் ஆமென் ஆமென் – (2)
ஆமென். . .

Dr.N. Emil Jebasingh | Varuga Varuga Aaveyanavar Engal Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
66
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.