Yesu En Thalaivar Jeevanin Athipar | இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்

1 minuteread

இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்
சந்தோஷம் சந்தோஷமே
இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்
யார் உண்டு சொல் மனமே! (2)

  1. நாள் மட்டும் நடத்தினாரே
    நன்மையால் சூட்டினாரே
    கரம் நீட்டித் தூக்கினாரே
    சுகம் சுகம் அவர் நிழலே
    முகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே
    எனக்கு ஓர் பொன்னாளே – (2) – இயேசு

2. இந்திய தேசம் வர
இளமையில் எழுந்து நின்றார்
சிறுவனே உட்கார் என்றார்
கேரியோ வென்று வந்தார்
மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்
உற்சாகம் செய்வார் இயேசு – (2) – இயேசு

3. ஆசையாய் ஆதரித்தோர்
சீற்றத்தால் அகன்றே போனார்
தேவனோ அவன் அருகில்
அதோனிராம் ஜட்சன் வென்றான்
மனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்
தேவனைப் பற்றி நீ வாழ் – (2) – இயேசு

4. ஓசன்னா சொன்னோர் எங்கே?
ஓடிடேன் என்றோன் எங்கே?
சிலுவையின் சுமை தணிக்க
பழகியோர் யாரும் இல்லை
இறுதிவரை நான் உம் சார்பில் நிற்க
அருள் ஈயும் இயேசு நாதா – (2) – இயேசு

Dr.N. Emil Jebasingh | Yesu En Thalaivar Jeevanin Athipar Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
109
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.