இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு இராஜாவே, இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம் – இயேசு
- மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்
அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்
இராஜபாதையைச் செம்மையாக்குவோம் – நம் - சாத்தானின் சதிகளைத் தகர்த்திடுவோம்
இனி இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்
இந்தப் பார்முழுதும் இயேசு நாமத்தையே
எல்லா ஊரிலும் எடுத்துரைப்போம் – நம் - ஆவி, ஆத்துமா, தேகம் அவர் பணிக்கே
இனி நான் அல்ல, அவரே எல்லாம்
என முடிவு செய்தோம், அதில் நிலைத்திருப்போம்
அவர் நாளினில் மகிழ்ந்திடுவோம் – நம்
Dr.N. Emil Jebasingh | Yesu Kristhuvin Nal Seedaraguvom Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics