Yesu Paranai Engalin Raajanai – Tamil Christian Lyrics – TPM Songs
இயேசு பரனை எங்களின் ராஜனை
ஏற்றியே போற்றியே வாழ்த்திடுவோம்
இகபர சுகத்தை ஏழைகள் எமக்கு
இலவசமாய் அவரீந்தாரே
1. காசினியில் கரிசனையாய் வந்து
கஷ்டத்தை சகித்தார் கர்த்தர்தாமே
பாசமாக பாடுவோம் நாமும்
மேசியாவின் நாமத்தையே
2. மாண்டுபோன மாந்தரை மீட்க
மகிதலம் வந்த நம் மகிபனையே
மாசில்லாமல் ஆசையோடு
நேசரில் நாம் மகிழ்ந்திடவே
3. மரணபயத்தால் நடுங்கின நம்மை
மகிமையால் நிறைத்துமே மகிழச்செய்தார்
சேவையே புரிவோம் இயேசுவின் நாமம்
சிறந்து இலங்கி செழித்திடவே
4. தாசரை போல் தாழ்மையை அணிந்த
நேசரை நேயமாய் பின்பற்றுவோம்
வேஷத்தை ஒழித்து தேவனில் நிலைத்து
வேதாளம் நடுங்கவே ஜெயித்திடுவோம்
5. தாவி வரும் பாவியை ஒருபோதும்
தள்ளாத ரட்சகன் ஜீவிப்பதால்
தாமதமேனோ பாவியே வாராய்
தயாபரனண்டை சேர்ந்திடவே
6. மேகமீதினில் மேசியா வருவார்
வேகமாய் நம்மைச் சேர்த்திடவே
வேறு ரூபமாய் மாறுவோம் நாமே
மேலோகத்திலேன்றும் ஜீவிக்கவே