Yesuvin Karangalai Patri | இயேசுவின் கரங்களைப் பற்றி

1 minuteread

இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களை பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கிலையே

அல்லேலூயா அல்லேலூயா

  1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
    இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
    அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
    அரவணைக்கும் இயேசு போதும் போதுமே
  2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
    அதிகமான கனமகிமை உண்டாக்கும்
    காண்கிண்ற எல்லாமே அநித்தியம்
    காணாதவைகளோ நித்தியம்
  3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
    வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
    சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
    தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்
  4. கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
    கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை
    எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
    இனியும் சோர்ந்து போவதே இல்லை
  5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
    அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
    கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
    வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 7 | Yesuvin Karangalai Patri | இயேசுவின் கரங்களைப் பற்றி | Tamil Christian Song Lyrics

0
47
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.