Yesuvin namam inithana|இயேசுவின் நாமம் இனிதான நமாம்

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Yesuvin namam inithana|இயேசுவின் நாமம் இனிதான நமாம்

இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இணையில்லா நாமம் இன்ப நாமம்

1.பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்

பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்

2.பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்

பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்

3.வானிலும் பூவிலும் மேலான நாமம்

வானாதி வானவர் இயேசுவின் நாமம்

4.நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்

நம்பினோரை என்றும் கைவிடா நாமம்

5.முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்

மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்

6.சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்

சாபப்பிசாசை துரத்திடும் நாமம்

0
6
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.