Aareeroo Aareeroo Bala Aareerp Balaganae – Tamil Christmas Songs and Lyrics
ஆரீரோ (3) பாலா ஆரீரோ பாலகனே
அற்புத பாலகனே (4) – ஆரீரோ
சிந்தை குளிர்ந்தவனாய்
கந்தை அணிந்தவனாய்
விந்தை நல் பாலகனாய்
வந்தீரோ பாரினிலே
கண்ணுறங்காய் விண்ணவனே
கன்னிமரி மடியிலே
ஆ…ஆ,,,,,ஆ….ஆ…..
ஆரீரோ (3) பாலா ஆரீரோ பாலகனே
கண்ணே கண்வளராய்
விண்ணவர் கோமகனாய்
பொன்னே மாணிக்கமே
மண்ணிலே மணிவிளக்கே
கண்ணுறங்காய் விண்ணவனே
கன்னிமரி மடியிலே
ஆ…ஆ,,,,,ஆ….ஆ…..
ஆரீரோ (3) பாலா ஆரீரோ பாலகனே