Aathi Devanae Isaayin Kilaiyaai – Tamil Christmas Songs and Lyrics
ஆதி தேவனே ஈசாயின் கிளையாய்
தாழ்மை சாயலாய் பூலோகில் ஜென்மித்தார்
விண்ணில் மகிழ்ச்சியாய் திரள்சேனை கீதம்
மண்ணிலே நாமொன்றாய் கூடியே பாடுவோம்
சாஷ்டாங்கம் செய்வோம் நாம்
தேவ ஆவியாய் தியாகத்தின் சாயலாய்
மாம்ச தேகமாய் லோகத்தின் மீட்புமாய்
பாவங்கள் போக்கினார் பகைமை நீக்கினார்
புதிய சிருஷ்டியாய் நம்மையும் மாற்றினார்
தேவனோடினைத்தார்
விண்ணில் ஓர்ஜோதி பாலனின் சாட்சியாய்
முன்னோக்கி செல்லவே சாஸ்திரிகள் கண்டனர்
மன்னர் இயேசுவை மானிடர் காணவே
தேசத்தின் எல்லைகள் எங்கிலும் செல்லுவோம்
சாட்சியாய் வாழுவோம்