Mey Paktharae Neer Vizhiththezhumpum – Tamil Christmas Songs and Lyrics
பூலோக மீட்பர் பிறந்தார்
- மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். - இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே. - அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். - இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார். - கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம். - அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்.
Mey Paktharae Neer Vizhiththezhumpum – Tamil Christmas Song Lyrics in English
Puuloeka Meetpar Piranthaar
- Mey Paktharae Neer Vizhiththezhumpum
Santhoeshamaay Innaalai Vaazhththitum
Inraikku Loeka Meetpar Jenmiththaar
Vinnoer Ivvinthaiyaik Kontaatinaar
Karththaathi Karththar Maanitanaanaar
Iratsaniya Karththaavaakath Thoenrinaar - Ithoe! Narseythi Kaelum Inraikkae
Immaanuvael Thaaveethin Uurilae
Puuloeka Meetparaakap Piranthaar
Ellaarukkum Santhoesham Nalkuvaar
Enrae Oor Thuuthan Pethlaem Maeypparkkae
Iraavil Thoenri Mozhinthittaanae - Annaeram Vaanoer Kuuttam Makizhnthu
Aanantha Paattaip Paati Isainthu
Vinnil Karththaavukku Maa Thuthiyum
Mannil Nalloerkkus Samaathaanamum
Enrallaeluuyaa Paati Vaazhththinaar
Theyveeka Anpin Maanpaip Poerrinaar - Isseythi Kaetta Maeyppar Uurukku
Arputhak Kaatsi Kaana Virainthu
Yoesaepputan Thaay Mariyaalaiyum
Munnanaimeethu Theyva Saeyaiyum
Kantaeää Theyvanpai Ennippoerrinaar
Aananthamaay Tham Manthaikkaekinaar - Kettuppoenoerai Meetta Naesamaam
Unnatha Anpais Sinthai Seyvoem Naam
Tham Jenmamuthal Saavumattukkum
Appaalan Seytha Theyva Vaazhkkaiyum
Anpoetu Thiyaanam Seythuvaruvoem
Nammeetpar Pinnae Sella Naatuvoem - Appoethu Vaana Saenaipoel Naamum
Sankeetham Paatalaam Ekkaalamum
Inthak Kempeera Naal Piranthavar
Annaal Nammael Tham Joethi Veesuvaar
Nam Raayan Anpaal Iratsippatainthoem
Avarin Niththiya Thuthi Paatuvoem